×

கோதண்ட ராமசுவாமி பிரம்ம ரதோற்சவம்


வேப்பனஹள்ளி,  மார்ச் 21:  வேப்பனஹள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கோதண்டராம சுவாமி கோயிலின்  பிரம்ம ரதோற்சவ விழா நடந்தது.வேப்பனஹள்ளி  அருகே பூதிமுட்லு கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோதண்டராம சுவாமி கோயிலின் பிரம்மேற்சவ விழா, கடந்த 15ம் தேதி  தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.  இதில் கோதண்டராமர் தேவி, பூதேவி சமேதராக தேரில் பவனி  வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் வேப்பனஹள்ளி,  சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பக்தர்கள்  ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில்,  விழாவில் முஸ்லிம்களும் பங்கேற்றனர். விழாவையொட்டி அன்னதானம்  வழங்கப்பட்டது.தேர்தல் தொடர்பானபுகார்களை “சிவிஜில்”ஆப் மூலம்தெரிவிக்கலாம்கிருஷ்ணகிரி, மார்ச் 21: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான புகார்களை “சிவிஜில்” என்ற ஆப் முலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என  கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான புகார்களை “சிவிஜில்” என்ற ஆப் மூலம், சம்மந்தப்பட்ட  தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி  மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து புகார்களையும் இந்த ஆப் வாயிலாக  தெரிவிக்கலாம். இந்த புகார்களின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Kothanda Ramaswamy Brahmma Rathosavam ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா